இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : 50 பேர் காயம்

India Train Crash Accident
By Irumporai Aug 17, 2022 03:36 AM GMT
Report

மகாராஷ்டிரா கோண்டியாவில் சிக்னல் கோளாறு காரணமாக சரக்கு ரயிலும், பயணிகள் ரயிலும் மோதி விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2 ரயில்கள் மோதி விபத்து

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து பயணிகள் ரெயில் நேற்று ராஜஸ்தான் மாநிலம் ஜோதாப்பூர் நோக்கி புறப்பட்டது.

இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து  : 50 பேர் காயம் | 50 Injured After 3 Bogies Of A Train Accident

இந்த ரயில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் மராட்டிய மாநிலத்தின் கொண்டியா என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அதே தண்டவாளத்தில் வந்த சரக்கு ரயில் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

50 பேர் படுகாயம்

இந்த விபத்தில் பயணிகள் ரயிலின் 3 பெட்டிகள் தடம்புரண்டன. இந்த விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த ரெயில்வே போலீசார், மீட்புக்குழுவினர் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை என கூறப்படுகிறது, சிக்னல் கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.