இந்தியாவில் 50% பணியாளர்கள் தங்கள் வேலைகளில் சலிப்பாக உள்ளனர்... - வெளியான கணக்கெடுப்பு...!
50% க்கும் அதிகமான இந்தியப் பணியாளர்கள் தங்களின் தற்போதைய வேலைகளால் சலித்துள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
பணியாளர்கள் வேலைகளில் சலிப்பு
Valuvox வேலைப் பட்டியல் தளத்தின் சார்பாக ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. இது இந்தியாவில் உள்ள வேலைகளின் தற்போதைய சூழ்நிலையைப் பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்களை வெளிப்படுத்தி உள்ளது.
கணக்கெடுப்புக்காக, இந்நிறுவனம் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மாதங்களில் முதலாளிகள், வேலை தேடுபவர்கள் மற்றும் பணியாளர்களை நேர்காணல் செய்தது.
தற்போது இந்த கணக்கெடுப்பின் படி, அனைத்து ஊழியர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் (57%) தங்கள் தற்போதைய வேலைகளில் ஆர்வமில்லாமல் அல்லது சலிப்படைந்துள்ளனர். வேலை தேடுபவர்களில் 28% பேர் மகிழ்ச்சி மற்றும் நெகிழ்வுத்தன்மைக்கு முன்னுரிமை அளிப்பதாகவும், 19% பேர் நல்ல வேலை வாழ்க்கை சமநிலைக்கு முன்னுரிமை என்றும் கூறியுள்ளனர்.
பொருளாதாரச் சூழல் காரணமாக, வேலை தேடுபவர்கள் தங்களின் தற்போதைய வேலையில் தயக்கம் காட்டுகின்றனர் என்று அந்த கணக்கெடுப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
