திருவனந்தபுரத்தில் தோனிக்கு மிகப் பெரிய கட் அவுட் வைத்த ரசிகர்கள்... - வைரல் புகைப்படம்..!
திருவனந்தபுரத்தில் தோனிக்கு மிகப் பெரிய கட் அவுட்டை ரசிகர்கள் வைத்துள்ளனர். இது தொடர்பான புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கிரிக்கெட் வீரர் தோனி
இந்திய கிரிக்கெட்டில் நட்சத்திர ஆட்டக்காரர், மின்னல் வேக விக்கெட் கீப்பர், கேப்டன் கூல் என தனது கேரியரில் பல பொறுப்புகளை சுமந்து எல்லாவற்றிலும் ஜொலித்து தனி முத்திரை பதித்தவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி.
இவர் டெஸ்ட் போட்டிகளிலிருந்து 2014ம் ஆண்டிலும், ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளிலிருந்து 2019ம் ஆண்டிலும் ஓய்வு பெற்றார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை வரவழைத்தது. ஆனால், இந்திய அணியின் ஹீரோவாக திகழ்ந்த அவரின் ஆட்டத்தை தற்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே ரசிகர்கள் பார்த்து ஆறுதல் அடைந்து வருகின்றனர்.
திருவனந்தபுரத்தில் தோனிக்கு கட் அவுட்
சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படத்தில், இந்தியா - இலங்கை இடையிலான 3வது ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு தோனிக்கு 50 அடி உயரத்தில் ரசிகர்கள் கட்அவுட் வைத்துள்ளனர்.
தற்போது இது தொடர்பான புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் இன்ப வெள்ளத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
50 ft massive cutout placed in Trivandrum, Kerala by @DhoniFansKerala ???#MSDhoni @msdhoni pic.twitter.com/51wZQXZDZQ
— TN MSDHONI EDITORS CLUB (@TNMSDFC_EDITORS) January 14, 2023