50 கோடி செல்போன் எண்கள் திருட்டு? - அதிர்ச்சியில் வாட்ஸ் அப் பயனர்கள்

WhatsApp
By Irumporai Nov 27, 2022 07:23 AM GMT
Report

உலக அளவில் 50 கோடி வாட்ஸ் அப் பயனர்களின் செல்போன் எண்கள் திருடப்பட்டு ஆன்லைனில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 வாட் அப் பயனர்கள் எண்கள் திருட்டு

தற்போது மக்களின் தகவல் தொடர்பில் முக்கிய பங்கு வகிப்பது வாடாஸ் . 2009-ம் ஆண்டு பிரையன் ஆக்டன் மற்றும் ஜேன் கோம் ஆகியோரால் வெறும் 55 பணியாளர்களை மட்டுமே கொண்டு இச்செயலி உருவாக்கப்பட்டது.

.வாட்ஸ் அப் நிறுவனத்தை பேஸ்புக் நிறுவனத்தினர் 19.3 பில்லியன் அமெரிக்க டாலர் விலை கொடுத்து கையகப்படுத்தினர்.

50 கோடி செல்போன் எண்கள் திருட்டு? - அதிர்ச்சியில் வாட்ஸ் அப் பயனர்கள் | 50 Crore Cell Phone Stolen On Whatsapp

உலகம் முழுவதும் வாட்ஸ் ஆப் செயலியை 2 பில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ் ஆப் நிறுவனம் தங்களது பயனாளர்களை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் அவ்வபோது புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது.

இதேபோல் வாட்ஸ் அப்பில் பயனர்களின் தரவுகள் குறித்த பாதுகாப்பின்மை அச்சமும் நிலவி வருகிறது.  

அதிர்ச்சி அறிக்கை

இந்த நிலையில் உலகில் மிகப்பெரிய ஹேக்கர்களின் தகவல் திருட்டில் கிட்டத்தட்ட 50 கோடி வாட்ஸ் அப் பயனர்களின் செல்போன் எண்கள் திருடப்பட்டு ஆன்லைனில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி அறிக்கை வெளியாகியுள்ளது.

சைபர்நியூஸ் அறிக்கையின்படி ஒரு ஹேக்கர் வெளியிட்டுள்ள விளம்பரத்தில், 2022 தரவுகளின் அடிப்படையிலான சுமார் 48.7 கோடி வாட்ஸ்அப் பயனர் மொபைல் எண்கள் விற்பனைக்கு தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த தரவுகளில் அமெரிக்கா, இங்கிலாந்து, எகிப்து, இத்தாலி, சவுதி அரேபியா மற்றும் இந்தியா உட்பட 84 நாடுகளைச் சேர்ந்த வாட்ஸ்அப் பயனர்களின் செல்போன் எண்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது