SETC பேருந்தில் 50% வரை கட்டணச் சலுகை - இப்படி முன்பதிவு செய்தால் கிடைக்கும்!
பயணிகளுக்கு 50 சதவீதச் சலுகை வழங்கப்படும் என்று தமிழகப் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
SETC பேருந்து
வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகளில் படுக்கை வசதி உள்ள , ஏசி பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்ட போதிலும் பயணிகள் எண்ணிக்கை என்பது உயரவில்லை. அதனால் புதிய திட்டங்களை போக்குவரத்துக்கு துறை அறிமுகம் செய்துள்ளது.
அதன் படி, முன்பதிவு செய்து ஒரு மாதத்தில் ஐந்து முறைக்கு மேல் பயணம் செய்யும் பயணிகளுக்கு அவர்களுடைய 6 ஆவது பயணத்தில் இருந்து டிக்கெட் கட்டணத்தில் 50% தள்ளுபடி பெறும் வாய்ப்பு ஏற்படுத்தப்படுகிறது.
50% கட்டணச் சலுகை
மேலும், மாற்று திறனாளிகளுக்கு ஒவ்வொரு பேருந்திலும் 2 இருக்கைகள் ஒதுக்கப்பட்டதை போல இனி அனைத்து SETC பேருந்துகளிலும் பெண்களுக்கு என நான்கு இருக்கைகள் தனியாக ஒதுக்கப்பட உள்ளது.
இந்த ஒதுக்கீடு என்பது குறிப்பிட்ட பேருந்தின் பயணம் தொடங்குவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு வரை ஆன்லைன் முன்பதிவு தளத்தில் கிடைக்கும். அதற்குள் பதிவு செய்து கொள்ளலாம். போக்குவரத்துக்கு துறை சார்ந்த வேலைகளில் பெண்களை ஊக்குவிப்பதற்காக பஸ் டிப்போக்களில் கேன்டீன்களை நடத்துவதில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, இளைஞர்களின் தொழில்முனைவை ஊக்குவிக்கும் வகையில், மாதாந்திர ரூபாய் 6,000 செலுத்தி பேருந்துகளில் பார்சல் சேவைகளை முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட உள்ளது.

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
