50,000 ஆண்டுகளுக்குப் பிறகு பூமியை நெருங்கும் பச்சை வால்மீன் நட்சத்திரம்... - நாசா தகவல்...!
50,000 ஆண்டுகளில் முதல் முறையாக இந்த வாரம் ஒரு அரிய பச்சை வால்மீன் நட்சத்திரம் பூமியை நெருங்கி கடந்து செல்ல உள்ளதாக நாசா தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து நாசா தெரிவிக்கையில்,
50,000 ஆண்டுகளில் முதல் முறையாக இந்த வாரம் ஒரு அரிய பச்சை வால்மீன் பூமியைக் கடந்து செல்ல உள்ளது. கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு இரவு வானத்தில் இந்த பச்சை வால் நட்சத்திரம் தெரியும். இந்த பச்சை வால் நட்சத்திரம் 2022 E3 (ZTF) என்று பெயரிடப்பட்டுள்ளது.
பிப்ரவரி தொடக்கத்தில் தோன்றும் இந்த நட்சத்திரம் பிப்ரவரி 1 மற்றும் 2 தேதிகளில் பூமிக்கு மிக அருகில் செல்லும். பச்சை வால்மீன் இரவு பூமிக்கு மிக அருகில் இருக்கும். இது தொலைநோக்கி அல்லது சிறிய தொலைநோக்கியில் தெரியும் என்று தெரிவித்துள்ளது.

Breaking - Rare, green comet to pass by Earth starting this week pic.twitter.com/U1MSjFEcKj
— Impact Stories & News (@insta_newsflash) January 12, 2023