செல்போனில் விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுமிக்கு திடீர் மாரடைப்பு..? அதிர்ச்சி சம்பவம்!
5 வயது சிறுமி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமி மரணம்
உத்திர பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் காமினி என்ற 5 வயது சிறுமி படுத்திருந்தவாறே செல்போனில் கார்ட்டூன் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென சிறுமி மயக்கமடைந்ததால் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
மாரடைப்பா..?
இதுகுறித்து ஹசன்பூர் சமூக நல மைய பொறுப்பாளர் துருவேந்திர குமார் கூறுகையில், மாரடைப்பால் சிறுமி இறந்திருக்கலாம் என்றார்.
மேலும், அம்ரோஹா தலைமை மருத்துவ அதிகாரி சத்யபால் சிங் கூறுகையில், சிறுமியின் உடலை உடற்கூராய்வுக்காக ஒப்படைக்குமாறு குடும்பத்தினரிடம் முறையிட்டும், அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.
சிறுமி மாரடைப்பால் இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் நோயால் இறந்தாரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது என்றார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.