பாலியல் இச்சைக்கு மறுத்த 5 வயது சிறுவன் கொலை - சாட்சியளித்த 9 வயது அக்கா
பாலியல் தொல்லை கொடுக்க முயன்றபோது முரண்டு பிடித்த 5 வயது சிறுவனை அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வேயர்
காஞ்சிபுரத்தில் சர்வேயராக பணியாற்றி வருபவர் ராஜேஷ். வழக்கமாக ஒரு சிற்றுண்டி கடையில் சாப்பிட்டு வந்த இவர் நாளடைவில் அந்த உரிமையாளர்களின் குடும்பத்தில் ஒருவர் போல் ஆகி விட்டார்.
கடை உரிமையாளர்களின் 5 வயது மகன் மற்றும் 9 வயது மகளை அடிக்கடி தனது வீட்டிற்கு அழைத்து செல்வார்.
சிறுவன் கொலை
இதே போல் கடந்த 2 நாட்களுக்கு முன், அவர்களை வீட்டிற்கு அழைத்து சென்று சிறுவன் சிறுமி இருவருக்கும் பாலியல் தொல்லை அளித்துள்ளார். சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற போது சிறுவன் முரண்டு பிடித்து கத்திய போது சிறுவனை கொடூரமாக தாக்கியுள்ளார்.
இந்த தாக்குதலில் தலையில் பலத்த காயம் அடைந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். நடந்த சம்பவங்கள் அனைத்தையும் சிறுமி குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சிறுமியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சர்வேயர் ராஜேஷ் தங்களிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், அப்போது சிறுவன் முரண்டு பிடித்ததால் ராஜேஷ் பலமாகத் தாக்கியதாகவும், அதில் சிறுவன் உயிரிழந்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராஜேஷை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.