இன்னும் 5 ஆண்டுகளுக்கு மக்கள் அதிக வரி செலுத்த வேண்டும் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

finance-minister 5-year people-tax-higher Nirmala-Sitharaman
By Nandhini Mar 31, 2022 05:37 AM GMT
Report

தமிழகத்தில் 9வது நாளாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகிறது.

தமிழகத்தில் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 8 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 3.78, டீசல் விலை ரூ.3.90 அதிகரித்துள்ளது.

தொடர்ந்து இதேநிலை நீடித்து வருவதால் இந்தியா முழுவதும் எதிர்கட்சிகள் மாபெரும் போராட்டத்தை கையிலெடுக்க முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், 10 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் ஆட்சியில் வழங்கப்பட்ட எண்ணெய் கடன் பத்திரங்களை மீட்க தொடர்ந்து செலவிட வேண்டியுள்ளதால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பெட்ரோல், டீசலுக்காக மக்கள் தொடர்ந்து அதிக வரி செலுத்த வேண்டியிருக்கும் என்று தெரிவித்துள்ளார். 

இன்னும் 5 ஆண்டுகளுக்கு மக்கள் அதிக வரி செலுத்த வேண்டும் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் | 5 Year People Taxhigher Minister Nirmala