கிணற்றில் விழுந்த பொம்மை..5 வயது சிறுவனுக்கு நேர்ந்த துயரம் -பகீர் பின்னணி!
கிணற்றில் விழுந்த பொம்மையை எடுக்க முயன்ற சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம்
கேரள மாநிலம் நேமத்தைச் சேர்ந்தவர் சுமேஷ் -ஆர்யா தம்பதியினர். இவர்களுக்குத் துருவன் என்ற 5 வயது மகனும், த்ருவிகா என்ற 2வயது மகளும் உள்ளனர். துருவன் அதே பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று, பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு வந்த துருவன்,தனது சகோதரியுடன் வீட்டின் பின் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த பொது அவரது கையிலிருந்த பொம்மை கிணற்றுக்குள் விழுந்துள்ளது.
அப்போது பொம்மையை எடுக்க நினைத்த துருவன் கிணற்றிற்கு அருகில் நாற்காலியைப் போட்டு அதில் ஏறிப் பார்க்கவே சிறுவன் தவறுதலாகக் கிணற்றில் விழுந்துள்ளார். இதனை அறியாத தாய் வீட்டு வேலை செய்து கொண்டிருந்துள்ளார்.பின்னர் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனைக் காணாததால் அக்கம்பக்கத்தில் தேடியதுள்ளனர்.
அதிர்ச்சி
பிறகு கிணற்றின் அருகில் நாற்காலி கிடந்ததைக் கண்டு சந்தேகத்தின் அடிப்படையில் எட்டிப் பார்த்த போது சிறுவன் சடலமாகக் கிடந்துள்ளார். இதனை கண்ட ஆர்யா கதறியழுந்துள்ளார். இவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்புப்படையினருக்கு தகவல் தெரிவித்தனர் .
தொடர்ந்து குழந்தையையும் பொம்மையையும் கிணற்றிலிருந்து வெளியே எடுத்துள்ளனர்.பின்னர் துருவனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றனர்.அங்குச் சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.