பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேறப்போகும் பிரபலம் யார்? - வெளியான தகவல்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறப்போகும் பிரபலம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி 65 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது,
இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவது வழக்கம். அதன்படி இதுவரை நாடியா சங், அபிஷேக் ராஜா, சின்னப்பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, ஐக்கி பெர்ரி ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் அபிஷேக் ராஜா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் இந்த வாரம் நடைபெற்ற எவிக்ஷனுக்கான நாமினேஷன் பட்டியலில் 7 பேர் இடம் பிடித்தனர். அதன்படி அபினய், இமான் அண்ணாச்சி, அமீர், நிரூப், அக்ஷரா, தாமரை, சிபி ஆகியோர் இடம் பெற்றனர்.
இவர்களில் அபினய் இந்த வாரம் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாவனிக்கும் அபினய்க்கும் இடையிலான ரிலேஷன்ஷிப் குறித்த பிரச்சனை பயங்கர சீரியஸாக போய் கொண்டு இருப்பதால் பிக்பாஸ் அபினய்யை இந்த வாரம் அனுப்ப மாட்டார் என கூறப்படுகிறது.
மேலும் வாக்குகள் அடிப்படையில் சிபி அதிக வாக்குகளை பெற்று முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக தாமரை செல்வி இரண்டாவது இடத்திலும், மூன்றாவது இடத்தில் நிரூப்பும், நான்காவது இடத்தில் இமான் அண்ணாச்சியும் உள்ளனர். ஐந்தாவது இடத்தில் அக்ஷராவும் ஆறாவது இடத்தில் நிரூப்பும் கடைசி இடத்தில் அபினய்யும் உள்ளனர். அபினய்யை வெளியே அனுப்ப வாய்ப்பு இல்லை என்பதால் இந்த வாரம் நிரூப் அல்லது அக்ஷரா ஆகிய இருவரில் ஒருவர் வெளியேற்றப்படலாம் என கூறப்படுகிறது.
இதேபோல் பிக்பாஸ் வோட்ஸ் தமிழ் வலைதளத்தில் பதிவான வாக்குகளின் அடிப்படையில் இந்த வாரம் அதிக ஓட்டுகளை பெற்று தாமரை செல்வி டாப்பில் உள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக அபினய் இரண்டாவது இடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து அக்ஷரா மூன்றாவது இடத்திலும், நிரூப் நான்காவது இடத்திலும் உள்ளனர். ஐந்தாவது இடத்தில் வைல்டு கார்டு என்ட்ரியான அமீரும் ஆறாவது இடத்தில் சிபியும் உள்ளனர். கடைசி இடத்தில் இமான் அண்ணாச்சி உள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் இமான் அண்ணாச்சி, நிரூப் மற்றும் அக்ஷரா ஆகிய மூன்று பேரில் ஒருவர் தான் நாளை வெளியேற்றப்படுவார் என்று தெரிவித்துள்ளனர்.
யாருக்கு தெரியும் ... எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பது போல யார் வெளியேறப் போகிறார்கள் என்று..!