மதுரை ரயில் விபத்து...உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த 5 பேர் அதிரடி கைது
மதுரையில் கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்ற ரயில் தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்த நிலையில், அந்த சம்பவத்தில் தொடர்புடைய 5 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை ரயில் விபத்து
மதுரை ரயில் நிலையம் அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சுற்றுலா ரயிலில் அதிகாலை டீ போடுவதற்காக அடுப்பை பற்ற வைத்த போது கேஸ் லீக்காகி தீப்பிடித்து எரிந்துள்ளது. பொருட்கள் திருடு போவதை தடுப்பதற்காக ரயில் பெட்டியை பூட்டியும் ஜன்னல்களை மூடியும் வைத்திருந்திருக்கிறார்கள்.
இதனால் தீப்பிடித்தவுடன் பயணிகளால் ரயிலில் இருந்து வெளியேற முடியாத நிலையில் ஏற்பட்டிருக்கிறது.. இந்த கோர விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
5 பேர் கைது
ரயில்வே நிர்வாகத்தின் அலட்சியமே இதற்கு காரணம் என்று பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனிடையே, ரயில் தீ விபத்து தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி நேற்று விசாரணை நடத்தினார். மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலக மாநாட்டு அரங்கில் விசாரணை நடைபெற்றது.
இந்த நிலையில், தீ விபத்து தொடர்பாக உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த இரு ஊழியர்கள் உள்பட 5 ஐந்து பேரை காவல்துறை கைது செய்துள்ளது. இவர்கள் மீது 304, 285, 164 ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.