மனித கண்களை விட 5 மடங்கு பெரிய கண்கள் .. ஆனால் வால்நட் அளவு மூளை - எந்த பறவை தெரியுமா?
மனித கண்களை விட 5 மடங்கு பெரிய கண்கள் உடைய பறவை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பெரிய கண்கள்
இந்த உலகத்தில் வாழும் விலங்குகளிடையே அவற்றின் வாழ்முறை, வாழிடம், உருவ அமைப்பு மற்றும் இனப் பெருக்க முறை ஆகியவற்றில் மிகப்பெரும் அளவிலான வேறுபாடுகள் காணப்படுகின்றன. இவை அனைத்தும் ஆச்சரியப்படத்தக்கதாகவும், ஆர்வமூட்டக் கூடியதாகவும் உள்ளது.
நம்மைச் சுற்றி நாம் காணக்கூடிய உயிரினங்கள் மிகச்சிலவே. ஆனால் இவ்வுலகில் எண்ணிலடங்கா விலங்கு சிற்றினங்கள் வாழ்ந்து வருகின்றன. அந்த வகையில் ஒரு பறவை அதன் மூளையை விடப் பெரிய கண்களைக் கொண்டு இருக்கும் பறவை எது என்று உங்களுக்குத் தெரியுமா? இது பற்றித் தெரிவாகப் பார்க்கலாம்.
அது நெருப்புக்கோழியின்(ஆஸ்ட்ரி )தான் .அதன் மூளையை விட 5 மடங்கு பெரிய கண்களைக் கொண்டுள்ளது. மேலும் கண்ணின் விட்டம் சுமார் 2 அங்குலம் (அதாவது 5 செ.மீ) ஆகும். நெருப்புக்கோழியின் மூளை சுமார் 26.34 கிராம் எடை கொண்டது. அதாவது சராசரி நீளம் 59.26 மிமீ மற்றும் அகலம் 42.30 மிமீ ஆகும்.
நெருப்புக்கோழி
சொல்லப்போனால் அதன் மூளை வால்நட் அளவு இருக்கும். நெருப்புக்கோழி மணிக்கு 97 கிமீ வேகத்தில் ஓடக் கூடியவை .ஒரு பெண் நெருப்புக்கோழி ஒரே நேரத்தில் 10 முதல் 12 முட்டைகளை இடுகிறது. இந்த முட்டையின் அளவு எந்த நில விலங்குகளை விட மிகப் பெரிய அளவில் இருக்கும்.
நெருப்புக்கோழியின் முட்டையின் எடை 1.4 கிலோ கொண்டது. அதுமட்டுமில்லாமல் நெருப்புக்கோழியின் கண்கள் மிகவும் கூர்மையானது. குறிப்பாக 3.5 கிலோமீட்டர்கள் (2.2 மைல்கள்) வரை பார்க்கும் திறனைக் கொண்டுள்ளன. இதன் மூலம் தங்களை எளிதாகத் தற்காத்துக் கொள்ள முடிகிறது.