5 குழந்தைகளுக்கு HIV உறுதி - அதிர்ச்சி பின்னணி!
5 குழந்தைகளுக்கு எஃச்.ஐ.வி. பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தலசீமியா
ஜார்க்கண்ட், சைபாசா நகரில் தலசீமியா மரபணு நோயால் பாதிக்கப்பட்ட ஏழு வயது குழந்தைக்கு எஃச்.ஐ.வி. தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதுபற்றிய விசாரணையின்போது, ரத்த வங்கியில் தங்கள் குழந்தைக்கு எஃச்.ஐ.வி. தொற்று பாதிக்கப்பட்டவரின் ரத்தம் மாற்றப்பட்டதாக பெற்றோர் குற்றம்சாட்டினர்.
எஃச்.ஐ.வி. பாதிப்பு
அதன்படி, ஜார்க்கண்ட் சுகாதார சேவைகள் இயக்குநர் தினேஷ் குமார் தலைமையிலான குழுவினர் சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் ரத்த வங்கியையும், குழந்தைகள் சிகிச்சைப் பிரிவையும் ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்ந்து ரத்த வங்கியில் சில குறைகளைக் கண்டறிந்ததாகவும், அவற்றை களைய மருத்துவமனை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதற்கிடையில், தலசீமியாவால் பாதிக்கப்பட்ட மேலும் நான்கு குழந்தைகளுக்கு எஃச்.ஐ.வி. பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.