“சொல்லிச் சொல்லி சரித்திரத்தில் பேர் பொறிப்போம்” - ஆசிய கோப்பை கால்பந்து போட்டி ; இந்திய அணியில் இடம் பிடித்த 5 தமிழக வீராங்கனைகள்
பெண்களுக்கான ஆசிய கால்பந்து தொடருக்கான இந்திய அணியில் 5 தமிழக வீராங்கனைகள் இடம்பிடித்துள்ளனர்.
இந்தியாவில், பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடர் வரும் ஜனவரி 20ஆம் தேதி முதல் பிப்ரவரி ஆறாம் தேதிவரை நடக்கவுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மும்பை, நவி மும்பை, புனே என மூன்று மைதானங்களில் மட்டும் போட்டிகள் நடக்கவுள்ளன.
மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன.
இந்திய அணி, 'ஏ' பிரிவில் சீனா, ஈரான், சீன தைபே அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.
இந்திய அணி, தனது முதல் போட்டியில் ஈரானை (ஜன. 20) எதிர்கொள்கிறது. இந்நிலையில் ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கான இந்திய பெண்கள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐந்து பெண்கள் இடம்பிடித்துள்ளனர். அதன்படி, இந்துமதி, சௌமியா, சந்தியா, கார்த்திகா, மாரியம்மாள் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
23 பேர் கொண்ட இந்திய அணியில் மணிப்பூருக்கு பிறகு தமிழக வீராங்கனைகள்தான் அதிகம் இடம்பிடித்திருக்கின்றனர்.
மணிப்பூரிலிருந்து 7 பேர்வரை இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளனர்.
? ANNOUNCEMENT ?
— Indian Football Team (@IndianFootball) January 11, 2022
Here's the list of 2⃣3⃣ #BlueTigresses ?, who will be fighting for ?? in the Women's @afcasiancup ?#WAC2022 ? #BackTheBlue ? #ShePower ? #IndianFootball ⚽ pic.twitter.com/bC9ji4DW6n