5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை - தற்போதைய முன்னிலை நிலவரம்

5-state-election-vote Counting
By Nandhini Mar 10, 2022 03:28 AM GMT
Report

இன்று உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட் ,மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிக் கொண்டிருக்கிறது.

கடந்த மாதம் 20-ம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் 117 சட்டமன்ற தொகுதிகளுக்கும், 40 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கோவாவில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது.

அதேபோல், உத்தரபிரதேசத்தில் 403 சட்டமன்ற தொகுதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடந்தது.

இந்நிலையில், தற்போது உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் ,கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று தொடங்கி நடைபெற்று வந்துக் கொண்டிருக்கிறது.

தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டு, பிறகு, வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட இருக்கின்றன.

இந்த வாக்கு எண்ணிக்கையில்,

உத்தரப்பிரதேசத்தில் பாஜக - 65,

சமாஜ்வாடி - 49

பகுஜன் சமாஜ் - 03

காங்கிரஸ் - 03

இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றன.

அதேபோல்-

பஞ்சாபில் ஆம் ஆத்மி - 25,

காங்கிரஸ் - 18,

பாஜக - 05,

அகாலிதளம் - 04

இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றன.

அதேபோல் -

உத்தரகாண்டில் பாஜக - 10,

காங்கிரஸ் - 13

தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.

கோவாவில் -

பாஜக - 16,

காங். - 20

உ.பி.யில் பா.ஜ.கவுக்கும், சமாஜ்வாடிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் கார்ஹல் தொகுதியில் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் முன்னிலை வகித்து வருகிறார்.

பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சன்னி போட்டியிடும் இரு தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறார்.

உ.பி மாநிலத்தில் கோரக்பூர் தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் முன்னிலை வகித்து வருகிறார்.