நாளை வெளியாகும் தேர்தல் முடிவுகள்..? ஆட்சியை பிடிப்பது யார்..?
நாளை காலை முதலே 4 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், அது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
5 மாநில தேர்தல்
ராஜஸ்தான், மத்திய பிரதேஷ், தெலுங்கானா, சட்டிஸ்கர், மிசோரம் போன்ற மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் நேரடியாக ராஜஸ்தான், மத்திய பிரதேஷ், சட்டிஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக - காங்கிரஸ் கட்சிகளுடக்கிடையே பெரும் போட்டி நிலவுகிறது.
தெலுங்கானா மற்றும் மிசோரம் மாநிலத்தில் மாநில கட்சிகளான முறையே பாரதீய ராஷ்ட்ரிய சமிதி மற்றும் மிசோ நேஷனல் ஃபிராண்ட் போன்ற கட்சிகளும் பெரும் ஆதிக்கத்தை செலுத்தி முக்கிய போட்டியாளராக உள்ளன.
பாஜகவா..? காங்கிரஸ்..?
வரும் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சி ஆட்சியை அமைக்கும் என்பதில் தான் தற்போது தேசிய கட்சிகள் பெரும் முனைப்பை காட்டி வருகின்றன. அதற்கு முன்னதாக இந்த 5 மாநில தேர்தல் நாடாளுமன்ற தேர்தலுக்கு பெரிய பூஸ்ட்டாக அமையும் என்பதால் இந்த வெற்றியை எதிர்பார்க்கின்றன.
உள்கட்சி பூசலால் ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் பின்னடைவை பெரும் என்றும், இது வரை 1993-ஆம் ஆண்டிற்கு பிறகு தொடர்ந்து ஆட்சியை யாரும் தக்கவைத்துக்கொள்ளவில்லை என்பதாலும் தாங்களே ஆட்சி அமைப்போம் என பாஜக பெரும் நம்பிக்கையை வெளிப்படுத்தி வருகின்றது.
அதே நேரத்தில், மத்திய பிரதேசத்தில் கடந்த முறை வெற்றி பெற்றும் ஆட்சியை தக்கவைத்து கொள்ளாமல் போன காங்கிரஸ் கட்சி, பாஜகவின் சூழ்ச்சிகள் மக்களுக்கு புரியும் என்றும் அதுவே தங்களுக்கு பெரும் ஆதரவை அளிப்பார்கள் என காங்கிரஸ் கூறுகின்றார்.
தெலுங்கானா மாநில அரசியல் இதில் சற்று மாற்றுப்பட்டதாகும். 10 ஆண்டுகளுக்கு முன்பு மாநிலம் பிரிக்கப்பட்ட நிலையில், தற்போது வரை ஆட்சியில் அமர்ந்துள்ள BRS கட்சி தற்போதும் மீண்டும் ஆட்சியை பிடிப்போம் என் நம்பும் நிலையில், முதல் முறையாக காங்கிரஸ் ஆட்சியை பிடிப்போம் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
மிசோரம் மாநிலத்தில் 40 தொகுதிகளே இருக்கும் நிலையில், அம்மாநிலத்தில் மிசோ நேஷனல் ஃபிராண்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகளே பெரும் ஆதிக்கத்தை செலுத்தியுள்ளன. மீண்டும் ஆட்சியை தக்கவைத்து கொள்ள மிசோ நேஷனல் ஃபிராண்ட் மீண்டும் ஆட்சியை பிடித்திட காங்கிரஸ் இருகட்சிகளும் பெரும் முன்னெடுப்புகளை எடுத்து வருகின்றன.
சட்டிஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி தான் மீண்டும் நீடிக்கும் என பலரும் கூறும் நிலையில், பாஜகவும் இம்முறை ஆட்சியில் நடைபெற்ற குளறுபடிகளை சுட்டிக்காட்டி, ஆட்சியை பிடிப்பதற்கான பல முன்னெடுப்புகளை எடுத்துள்ளது.