5 மாநில தேர்தல் முடிவுகள் - உத்திரபிரதேசத்தில் தற்போதை முன்னணி நிலவரம்
இன்று உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிக் கொண்டிருக்கிறது.
கடந்த மாதம் 20-ம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் 117 சட்டமன்ற தொகுதிகளுக்கும், 40 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கோவாவில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. அதேபோல், உத்தரபிரதேசத்தில் 403 சட்டமன்ற தொகுதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடந்தது.
இந்நிலையில், தற்போது உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் ,கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று தொடங்கி நடைபெற்று வந்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் உத்திரபிரதேசத்தில் தற்போதைய முன்னணி நிலவரம் வெளியாகி உள்ளது.
அதன்படி -
பாஜக - 254
சமாஜ்வாடி - 120
பகுஜன் சமாஜ் - 07
காங்கிரஸ் - 04
மற்றவை - 03