அடுத்த பிரதமர் கெஜ்ரிவால்... - அடித்து கூறிய ஆம் ஆத்மி எம்எல்ஏ

5-state-election-results-2022 கெஜ்ரிவால் next-prime-minister-is-kejriwal அடுத்த பிரதமர்
By Nandhini Mar 10, 2022 07:25 AM GMT
Report

இன்று உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிக் கொண்டிருக்கிறது.

கடந்த மாதம் 20-ம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் 117 சட்டமன்ற தொகுதிகளுக்கும், 40 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கோவாவில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது.

அதேபோல், உத்தரபிரதேசத்தில் 403 சட்டமன்ற தொகுதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடந்தது. தற்போது உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் ,கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று தொடங்கி நடைபெற்று வந்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக பக்வந்த் மன் போட்டியிட்டுள்ளார்.

தேர்தல் முடிவுகள் வெற்றியை நோக்கி முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கிறது. பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி பஞ்சாப்பில் ஆம் ஆத்மி முன்னிலை வகித்து வருகிறது.

இந்நிலையில், போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் பின்னடைவை சந்தித்துள்ளார். இதனையடுத்து, விரைவில் அவர் ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதம் வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சியை பின்னுக்கு தள்ளி ஆம் ஆத்மி கட்சி பெருவாரியான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

இந்நிலையில், அக்கட்சியின் தேசிய தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அர்விந்த் கெஜ்ரிவால் பிரதமராக பதவியேற்பார் என்று அக்கட்சியின் எம்.எல்.ஏவும், பஞ்சாப் மாநில தேர்தல் பொறுப்பாளருமான ராகவ் சத்தா தெரிவித்திருக்கிறார்.    

அடுத்த பிரதமர் கெஜ்ரிவால்... - அடித்து கூறிய ஆம் ஆத்மி எம்எல்ஏ | 5 State Election Results 2022 Next Pm Kejriwal

இது குறித்து ராகவ் சத்தா தெரிவிக்கையில், 

50 ஆண்டுகளுக்கும் மேலாக பஞ்சாப் மக்களுக்கு எந்த வசதிகளையும் செய்து தராமல் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்த கட்சிகளை மக்கள் அதிகாரத்திலிருந்து தூக்கி எரிந்திருக்கிறார்கள். 

இன்று நாங்கள் தேசிய கட்சியாக மாறி இருக்கிறோம். கட்சி தொடங்கி 10 ஆண்டுகளில் 2 மாநிலங்களில் ஆட்சி அமைக்க உள்ள டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் ஒரு நாள் இந்திய நாட்டை ஆட்சி செய்வார்.

இவ்வாறு அவர் கூறினார்.