நான் ராஜ்பவனில் பதவி ஏற்க மாட்டேன் - முதலமைச்சர் வேட்பாளர் பகவந்த் மன் அறிவிப்பு
இன்று உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிக் கொண்டிருக்கிறது.
கடந்த மாதம் 20-ம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் 117 சட்டமன்ற தொகுதிகளுக்கும், 40 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கோவாவில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. அதேபோல், உத்தரபிரதேசத்தில் 403 சட்டமன்ற தொகுதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடந்தது.
தற்போது உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் ,கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக பக்வந்த் மன் போட்டியிட்டார். பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது.
போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் பின்னடைவை சந்தித்துள்ளார். இதனையடுத்து, விரைவில் அவர் ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதம் வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு பஞ்சாப் முதல்வராக பக்வந்த் மன் வெற்றிவாகை சூடியுள்ளார்.
தற்போது, மக்களைச் சந்தித்த பக்வந்த் மன் பேசுகையில், நான் ராஜ்பவனில் பதவியேற்கப்போவதில்லை. பஞ்சாப்பின் அடையாளம் பகத்சிங். அவரது கிரமமான கட்கர் காலனில்தான் நான் பதவி ஏற்கப் போகிறேன். அங்குதான் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது என்று பேசினார்.