காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 2ஆக குறைந்தது

congress 5-state-election-results-2022 setback காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் 2ஆக குறைந்தது
By Nandhini Mar 10, 2022 06:35 AM GMT
Report

இன்று உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிக் கொண்டிருக்கிறது.

கடந்த மாதம் 20-ம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் 117 சட்டமன்ற தொகுதிகளுக்கும், 40 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கோவாவில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. அதேபோல், உத்தரபிரதேசத்தில் 403 சட்டமன்ற தொகுதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடந்தது.

தற்போது உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் ,கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று தொடங்கி நடைபெற்று வந்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 2 ஆக குறைந்து வருகிறது. பஞ்சாப்பில் ஆட்சியை இழப்பதால் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 3லிருந்து 2ஆக குறைகிறது.

நாட்டில் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் கூட்டணியில் மட்டுமே காங்கிரஸ் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.