நமது பிரதமர் இந்திய மக்களுக்காக மட்டுமே உழைத்து வந்தார் - காயத்ரி ரகுராம் பெருமிதம்

BJP 5-state-election-results-2022 Gayatri Raghuram is proud
By Nandhini Mar 10, 2022 11:20 AM GMT
Report

இன்று உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிக் கொண்டிருக்கிறது.

கடந்த மாதம் 20-ம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் 117 சட்டமன்ற தொகுதிகளுக்கும், 40 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கோவாவில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. அதேபோல், உத்தரபிரதேசத்தில் 403 சட்டமன்ற தொகுதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடந்தது.

இந்நிலையில், தற்போது உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் ,கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று தொடங்கி நடைபெற்று வந்துக் கொண்டிருக்கிறது.

உத்திரப்பிரதேசம், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய 4 மாநிலங்களில் முன்னிலை வகித்து வரும் பாஜக வெற்றி வாகை சூட உள்ளது.

உத்திரப்பிரதேசத்திலும், உத்தரகண்டிலும் பெரும்பான்மை இடங்களை விட கூடுதலான இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இத்தேர்தல் வெற்றி குறித்து, தமிழக பாஜகவின் செயலாளராக இருக்கும் காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில் அடுத்தடுத்து பதிவுகளை வெளியிட்டுள்ளார்.

அதில் - 


தமிழக மக்கள் பாஜகவுக்கு வாக்களித்தால் மட்டுமே நேரடி பலன் கிடைக்கும். அல்லது எல்லா நன்மைகளையும் தடுக்கும் இடைத்தரகர்கள் (உள்ளூர் கட்சிகள்) இருப்பார்கள். இது கதையின் கருத்து. தமிழ்நாடு 2024 பா.ஜ.க.

அவர்கள் நாட்டிற்கு எதிராகப் போராடுவதற்கு நிறைய பணம் செலவழித்தனர், மக்களைத் தூண்டியது. அவர்கள் இந்திய விவகாரங்களில் ஊடுருவ வெளிநாட்டு கலைஞர் மற்றும் வெளிநாட்டு ஆர்வலர்களை நம் நாட்டைப் பற்றி பேச வைத்தார்கள். எல்லாம் வீணாகிவிட்டது Congress-mukt Bharat உண்மை வெல்லும்.

உலகம் முழுவதிலுமிருந்து மற்றும் இந்தியாவிலுள்ள பாஜக காரியகர்த்தாக்களுக்கு பெரும் ஆதரவு அளித்ததற்கு நன்றி. சிறந்த களப்பணிக்கு 5 மாநில பாஜக காரியகர்த்தாக்களுக்கு நன்றி. பாஜகவுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி. பாரத தாய் வாழ்க.