பாஜகவுக்கு மாற்று சக்தி என யாருமே கிடையாது... - அண்ணாமலை பெருமிதம்
இன்று உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிக் கொண்டிருக்கிறது.
கடந்த மாதம் 20-ம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் 117 சட்டமன்ற தொகுதிகளுக்கும், 40 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கோவாவில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. அதேபோல், உத்தரபிரதேசத்தில் 403 சட்டமன்ற தொகுதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடந்தது.
இந்நிலையில், தற்போது உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் ,கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று தொடங்கி நடைபெற்று வந்துக் கொண்டிருக்கிறது.
உத்திரப்பிரதேசம், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய 4 மாநிலங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. உத்திரப்பிரதேசத்திலும், உத்தரகண்டிலும் பெரும்பான்மை இடங்களை விட கூடுதலான இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.
இதனையடுத்து, பாஜக தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தோடு ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில், பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில், தேசிய அளவில் பாஜகவுக்கு மாற்று சக்தி என யாரும் இல்லை என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது. பாஜகவின் உழைப்புக்கு ஊதியம் கிடைத்துக்கொண்டே வருகிறது என்றார்.