அன்று காமெடி நடிகர் - இன்று பஞ்சாப் மாநில முதல்வராக பக்வந்த் மான்

5-state-election-results-2022 Chief Minister of Punjab bhagwant-mann பக்வந்த் மான்
By Nandhini Mar 10, 2022 07:59 AM GMT
Report

இன்று உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிக் கொண்டிருக்கிறது.

கடந்த மாதம் 20-ம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் 117 சட்டமன்ற தொகுதிகளுக்கும், 40 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கோவாவில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது.

அதேபோல், உத்தரபிரதேசத்தில் 403 சட்டமன்ற தொகுதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடந்தது. தற்போது உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் ,கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று தொடங்கி நடைபெற்று வந்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக பக்வந்த் மன் போட்டியிட்டுள்ளார்.

தேர்தல் முடிவுகள் வெற்றியை நோக்கி முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கிறது. பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி பஞ்சாப்பில் ஆம் ஆத்மி முன்னிலை வகித்து வருகிறது.

போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் பின்னடைவை சந்தித்துள்ளார். இதனையடுத்து, விரைவில் அவர் ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதம் வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

டிவி சேனல்களில் காமெடி கதாபாத்திரங்கள் நடித்து மக்களிடையே பிரபலமான பக்வந்த் மான் கடந்த 2014ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். இதனையடுத்து, கடந்த 2014ம் ஆண்டு, 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு பஞ்சாப் முதல்வராக வெற்றி பெற்றிருக்கிறார்.

இந்நிலையில், 2022ம் ஆண்டு பக்வந்த் மான் பஞ்சாப் மாநில முதல்வராகிறார்.

அன்று காமெடி நடிகர் - இன்று பஞ்சாப் மாநில முதல்வராக பக்வந்த் மான் | 5 State Election Results 2022 Bhagwant Mann