பக்வந்த் மன் வீட்டில் தயாராகும் பெரிய பெரிய ஜிலேபிகள் - ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம்
இன்று உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிக் கொண்டிருக்கிறது.
கடந்த மாதம் 20-ம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் 117 சட்டமன்ற தொகுதிகளுக்கும், 40 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கோவாவில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது.
அதேபோல், உத்தரபிரதேசத்தில் 403 சட்டமன்ற தொகுதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இந்நிலையில், தற்போது உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் ,கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று தொடங்கி நடைபெற்று வந்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக பக்வந்த் மன் போட்டியிட்டுள்ளார். தேர்தல் முடிவுகள் வெற்றியை நோக்கி முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கிறது.
இதனையடுத்து, பக்வந்த் மன் தனது வீட்டில் பெரிய அளவிலான கொண்டாட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளார்.
பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி பஞ்சாப்பில் ஆம் ஆத்மி முன்னிலை வகித்து வருகிறது. இதனால், தனது வீட்டில் அவர், இந்த மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாக பெரிய பெரிய பாத்திரங்களில் ஏராளமான ஜிலேபிகள் செய்யப்பட்டு வருகிறதாம்.
அதற்கான ஏற்பாடுகள் அவர் நேற்றே தொடங்கி விட்டாராம். இந்நிலையில், தற்போது 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி முன்னிலையில் உள்ளது. இதனால், அவரது வீட்டில் ஒரே ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது.