5 மாநில தேர்தல் 2022 - காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி ஆட்சியை பிடிக்கிறது ஆம் ஆத்மி கட்சி?

5-state-election-results-2022 AAM admi Party 5 மாநில தேர்தல் ஆம் ஆத்மி கட்சி
By Nandhini Mar 10, 2022 05:01 AM GMT
Report

இன்று உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிக் கொண்டிருக்கிறது.

கடந்த மாதம் 20-ம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் 117 சட்டமன்ற தொகுதிகளுக்கும், 40 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கோவாவில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. அதேபோல், உத்தரபிரதேசத்தில் 403 சட்டமன்ற தொகுதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடந்தது.

இந்நிலையில், தற்போது உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் ,கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று தொடங்கி நடைபெற்று வந்துக் கொண்டிருக்கிறது.

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி ஆட்சியை பிடிக்கிறது ஆம் ஆத்மி கட்சி. பெரும்பான்மைக்கு 59 இடம் தேவையான நிலையில்,

ஆம் ஆத்மி 80க்கும் அதிமகான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இதனால், பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி ஆட்சியை கைப்பற்றி அரசணையில் அமர உள்ளது. 

தற்போதைய நிலவரப்படி - 

ஆம்ஆத்மி - 83

காங்கிரஸ் - 18

பாஜக - 04

மற்றவை  -02