பஞ்சாபில் வீசிய ஆம் ஆத்மியின் சுனாமி அலை
உத்தரபிரதேசம்,உத்தரகாண்ட்,பஞ்சாப்,மணிப்பூர்,கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகி வருகிறது.
இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.இதையடுத்து 8.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரங்கள் வெளியாகின.
நாட்டு மக்கள் உற்று நோக்கிய உத்தர பிரதேசத்தில் ஆளும் கட்சியான பாஜக முன்னிலை பெற்றுள்ளது. தற்போது அங்கு யோகி ஆதித்யநாத் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது.
உத்தரபிரதேசத்தில் ஆளும் கட்சியான பாஜக 262 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது. இந்நிலையில் பஞ்சாப்பில் நடந்து வரும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சிக்கு மக்கள் பெரும்பான்மை கிடைத்திருக்கிறது. பஞ்சாப்பில் 90 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை பெற்றுள்ளது.
இதனால் காங்கிரஸ் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.அதோ போன்று கோவாவிலும் ஆம் ஆத்மி 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
பஞ்சாபில் ஆம் ஆத்மியின் வெற்றியை அக்கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகிறது.