உ.பி-யில் பாஜக ஆட்சியும்,பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கிறது - வெளியான கருத்துகணிப்பு முடிவுகள்
பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சியும்,உத்தரபிரதேசத்தில் பாஜகவும் ஆட்சி அமைக்கும் என இந்தியா டுடே வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசம்,பஞ்சாப்,உத்தரகாண்ட்,மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பிப்ரவரி 10 ஆம் தேதி தொடங்கிய வாக்குப்பதிவு இன்று வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்டன.
உத்தர பிரதேசத்திற்கு 7 கட்டங்களாகவும்,மணிப்பூர் சட்டசபைக்கு 2 கட்டங்களாகவும் தேர்தல் நடத்தப்பட்டது.
பஞ்சாப்,உத்தரகாண்ட்,கோவா உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது.
இந்நிலையில் தேர்தல் இன்று முடிவுற்ற நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இந்தியா டுடே வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவில் 403 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக 288 முதல் 326 இடங்கள் வரை பெற்று ஆட்சியமைக்கும் என்று தெரவிக்கப்பட்டுள்ளது.
சமாஜ்வாதி கட்சி 71லிருந்து 101 இடங்களையும்,காங்கிரஸ் 1லிருந்து 3 இடங்களை வரை பெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
117 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் 19-லிருந்து 31 இடங்களை பெறும் என்றும்,பிஜேபிக்கு 1 முதல் 4 இடங்களும்,ஆம் ஆத்மி கட்சி 76 முதல் 90 இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்கும் என்று கருத்து கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
70 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட உத்தரகாண்ட் சட்டசபைக்கு பாஜக 36 முதல் 46 இடங்களை பெற்று ஆட்சி அமைக்கும் என்றும்,காங்கிரஸ் கட்சி 20 முதல் 30 இடங்களை பெற்று எதிர்கட்சியாக அமரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
40 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட கோவாவில் பாஜக 14 முதல் 18 இடங்களை கைப்பற்றும் எனவும்,காங்கிரஸ் கட்சி 15 முதல் 20 இடங்களை வரை கைப்பற்றிய ஆட்சி அமைக்கும் எனவும் வெளியாகியுள்ளது.
60 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட மணிப்பூர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 4 முதல் 8 இடங்களை கைப்பற்றும் என்றும்,
பாஜக 33 முதல் 43 இடங்கள் வரை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என இந்தியா டுடே வெளியிட்டுள்ள கருத்து கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளில் மாநில வாரியாக ஆட்சி அமைக்க போகும் கட்சிகளின் விவரங்களை பார்க்கலாம்
உத்தர பிரதேசம் மாநிலம் (மொத்த இடங்கள் - 403)
பாஜக ஆட்சி
பஞ்சாப் மாநிலம் (மொத்த இடங்கள் - 117)
ஆம் ஆத்மி கட்சி
உத்தரகாண்ட் மாநிலம் (மொத்த இடங்கள் - 70)
பாஜக ஆட்சி
கோவா மாநிலம் (மொத்த இடங்கள் - 40)
காங்கிரஸ் ஆட்சி
மணிப்பூர் மாநிலம் (மொத்த இடங்கள் - 60)
பாஜக ஆட்சி