சாதி வெறி.. 6 வயது சிறுவன் உட்பட 5 பேரை சரமாரியாக வெட்டிய நபர்கள் - கொடூரம்!
இரண்டு நபர்கள் பட்டியலின சமூகத்தை சேர்ந்த 5 பேரை வெட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாக்குதல்
மதுரை மாவட்டம், அவனியாபுரம் அருகே பெருங்குடியில் அப்பகுதியை சேர்ந்த கணபதி, விஜய் குட்டி, அஜித் உட்பட ஐந்து இளைஞர்கள் இரவு நேரத்தில் ஊருக்குள் உள்ள நாடக மேடை அருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளனர். அப்பொழுது அந்த வழியாக வந்த 2 நபர்கள் 'கண்ணா எங்கிருக்கிறான்?' என்று விசாரித்துள்ளனர்.
அதற்கு, 'தெரியாது' என்று கூற, திடீரென்று அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அங்கிருந்தவர்களை வெட்டத் தொடங்கியுள்ளனர். இதனால் அதிர்ச்சியில் அங்கிருந்து தப்பியோட நினைத்தபோது அஜித், விஜய் குட்டி, கணபதி ஆகியோர் கடுமையாக காயமடைந்தனர்.
ஹோம் ஒர்க் நோட் எங்கே?.. 8-ம் வகுப்பு மாணவரை அடித்து கழுத்தை பிடித்த ஆசிரியை - சிகிச்சையில் சிறுவன்!
கொடூரம்
இந்நிலையில், அந்த பகுதியில் பெரியசாமி என்பவர், தன் 6 வயது பேரனுடன் மருத்துவமனைக்கு அந்த வழியாக சென்று கொண்டிருந்த போது இவர்களின் கதறல் சத்தம் கேட்டு வந்து பார்த்துள்ளார். அப்பொழுது அந்த மர்ம நபர்கள் இவர்களையும் வெட்டினர். மேலும், அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் வந்ததும் அவர்கள் தப்பி சென்றனர்.
இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர், அதில் இவர்கள் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் என்பதால் வெட்டியதாக தெரியவந்தது. இந்த கொடூர தாக்குதல் சம்பவத்தில் தீண்டாமை வன்கொடுமை உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து
அப்பகுதியை சேர்ந்த மாரி, சசிகுமார் ஆகியோரை பிடித்து விசாரித்தபோது அவர்கள் அதனை திட்டமிட்ட தாக்குதல்தான் என்று ஒப்புக்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.