5 பைசாபிரியாணி.. காற்றில் பறந்த சமூக இடைவெளி ..முண்டியடித்த மக்கள்.. விரட்டிய போலீஸ்!
மதுரையில் 5 பைசாவுக்கு பிரியாணி என்ற அறிவிப்பால் அந்த பகுதியில் மக்கள் முண்டியடித்து கொண்டு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கொரோனாவின் 2 வது அலையால் மதுரை அதிகரித்து தற்போதுதான் படிப்படியாக குறைந்து வருகின்றன. மேலும், 3 ஆவது அலையை எதிர்கொள்ளவும் அரசு தயாராக இருந்து வருகிறது.
இந்த நிலையில் மதுரை செல்லூர் பகுதியில் அக்ஷயா என்பவர் அசைவ உணவகம் ஒன்றை திறந்தார்கள். அதோடு உணவகத்திற்கு விளம்பரம் தேடும் வகையில் முதல் நாள் பிரியாணி வாங்க வரும் முதல் 100 நபர்களுக்கு 5 பைசாவுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என அறிவித்தனர்.
இந்த அறிவிப்புகளுடன் மாநகரம் முழுவதும்விளம்பரபடுத்தியதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து 5 பைசாவுக்கு பிரியாணியை வாங்குவதற்காக இன்று காலை முதல் நீண்ட வரிசையில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் குவிந்தனர்.
பெரும்பாலானோர் முகக் கவசம் அணியவில்லை. சமூக விலகலையும் கடைபிடிக்காமல் அனைவர் கையிலும் பழைய ஐந்து பைசா நாணயம் வைத்திருந்தனர்.
பிரியாணி தீர்ந்த நிலையிலும் கூட்டம்அவர்கள் அந்த இடத்தை விட்டு நகரவில்லை. இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து கூட்டத்தினரை கலைத்தனர்.
மேலும் கொரோனா பரவல் நேரத்தில் இது போல் கூட்டம் கூடுவது அரசின் நடவடிக்கைக்கு எதிரானது என்று கூட்டத்தினரையும் கடைக்காரர்களையும் போலீஸார் எச்சரித்தனர்.