உச்சநீதிமன்றத்தின் 5 புதிய நீதிபதிகள் பதவியேற்றனர்...!

India Supreme Court of India
By Nandhini 1 மாதம் முன்

உச்சநீதிமன்றத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதிகள் 5 பேர் பதவியேற்றுள்ளனர்.

5 புதிய நீதிபதிகள் பதவியேற்றனர்

நீதிபதிகள் பங்கஜ் மித்தல், நீதிபதி சஞ்சய் கரோல், நீதிபதி சஞ்சய் குமார், நீதிபதி அஹ்சானுதீன் அமானுல்லா மற்றும் நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டார்கள்.

புதிய நீதிபதிகள் 5 பேருக்கும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

புதிய நீதிபதிகள் பதவியேற்கும் நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள 34 நீதிபதி பணியிடங்களில் தற்போது 27 நீதிபதிகள் பணியாற்ற வருகிறார்கள். கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி உச்சநீதிமன்ற கொல்ஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை அனுப்பியது.

இதனையடுத்து கடந்த சனிக்கிழமை மத்திய அரசு ஒப்புதல் வழங்கியதன் அடுத்து, உச்சநீதிமன்றத்துக்கு புதிதாக 5 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

5-new-supreme-court-judges-sworn



தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.