ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கத்திக்குத்து - போலீசார் விசாரணை
திருவாரூர் அருகே வேலி தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கத்திக்குத்து. குடவாசல் போலீசார் விசாரணை.
5 பேருக்கு கத்திக்குத்து
திருவாரூர் மாவட்டம் முகுந்தனூர் ஊராட்சிக்குட்பட்ட தாழ்பாள் மாதா கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் வீரபாண்டியன் (60).
இவரது பக்கத்து வீட்டில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே வேலி தகராறு இருந்துள்ளது.
இந்நிலையில் நில அளவையர் கொண்டு என்று வேலி இருக்கும் இடம் அளக்கப்பட்டது. அப்போது இரு குடும்பத்தினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது குமார் மற்றும் அவரது சகோதரர் அன்பழகன் குடும்பத்தின் ஒன்று சேர்ந்து, வீரபாண்டியனின் சகோதரர் சுரேஷ்குமார், மகன்கள் மணிகண்டன், மகேஸ்வரன் உள்ளிட்ட 5 பேரையும் கத்தியால் குத்தி தாக்கி உள்ளனர்.
படுகாயமடைந்த 5 பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதில் மணிகண்டன் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு காரணமான குற்றவாளிகளை குடவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
வேலி தகராறு காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.