ஒரு குடும்பத்தையே உயிரோடு எரித்த கிராமத்தினர் - மாந்திரீகத்துக்காக நடந்த கொடூரம்
மாந்திரீகத்தின் பேரில் ஒரு குடும்பம் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரோடு எரிக்கப்பட்ட குடும்பம்
பீகாரின் பூர்ணியா மாவட்டத்தில் உள்ள டெட் காமா கிராமத்தில், ஓரான்(Oraon) பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த சமூகத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தின் 5 நபர்கள் உயிரோடு எரித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு Babulal Oraon மற்றும் அவரது மனைவி, சகோதரர், பாட்டி மற்றும் அண்ணி ஆகிய 5 பேரையும், அந்த கிராமத்தினர் உயிரோடு தீ வைத்து கொளுத்தியுள்ளனர்.
இது குறித்து அவர்களின் உறவினர்களான 16 வயது சோனு குமார் என்பவர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார்.
3 பேர் கைது
தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடல்களை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், இந்த குற்றத்தில் ஈடுபட்டதாக கூறி முதற்கட்டமாக 3 நபர்களை கைது செய்துள்ளனர். இந்த கொடூர சம்பவத்திற்கும் தூண்டியதாக இரு பெண்களை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் மொத்த கிராமத்திற்கும் தொடர்பு உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், புகைப்படங்கள், எலுமிச்சை பழம் ஆகியவற்றை வைத்து மாந்திரீக சடங்குகள் செய்ததும் கண்டறியப்பட்டுள்ளது.