திருக்கடையூரில் டாக்டர் உட்பட 5 பேருக்கு கொரோனா உறுதி... ஆரம்ப சுகாதார நிலையம் மூடல்...

Thirukkadaiyur Covid 19 positive
By Petchi Avudaiappan May 23, 2021 06:33 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

திருக்கடையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர், செவிலியர்கள் உட்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மருத்துவமனை மூடப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது.

இதனிடையே திருக்கடையூர் அரசு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவர், செவிலியர், சுகாதார ஆய்வாளர், பணியாளர் ஆகிய 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மருத்துவமனை இன்று மூடப்பட்டது.

திருக்கடையூரில் டாக்டர் உட்பட 5 பேருக்கு கொரோனா உறுதி... ஆரம்ப சுகாதார நிலையம் மூடல்... | 5 Medical Staff Covid Positive In Thirukkadaiyur

இதனையடுத்து சுகாதாரத்துறை அலுவலர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகம் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய இருப்பதால் தற்காலிகமாக மருத்துவமனை மூடப்படுவதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை மூலம் திருக்கடையூர், பிள்ளைப்பெருமாள் நல்லூர், டி. மணல்மேடு, அபிஷேககட்டளை, உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகிறது. 

சுகாதார நிலையம் மூடப்பட்டுள்ளதால் நோயாளிகள் அருகில் உள்ள வேறு மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.