கூண்டில் இருந்து தப்பிய 5 சிங்கங்கள் - பதறிப்போன ஊழியர்கள்
ஆஸ்திரேலியாவில் உள்ள பூங்கா ஒன்றில் கூண்டில் இருந்து 5 சிங்கங்கள் தப்பியதால் ஊழியர்கள் பதற்றம் அடைந்தனர்.
கூண்டில் இருந்து தப்பிய சிங்கங்கள்
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மிகப்பெரிய உயிரியல் பூங்கா ஒன்று உள்ளது. நேற்று காலை இந்த உயிரியல் பூங்கா பார்வையாளர்களுக்காக திறகப்படுவதற்கு முன்பு ஊழியர்கள் விலங்குகளை ஆய்வு செய்து வந்தனர்.
அப்போது கூண்டில் இருந்து 5 சிங்கங்கள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அதில் சிங்கங்கள் 5ம் கூண்டில் இருந்து தப்பி ஓடியது தெரியவந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிங்கம் தப்பிய போது பார்வையாளர்கள் யாரும் இல்லை. இருந்த போதிலும் பாதுகாப்பு காரணங்களுக்காக உயிரியல் பூங்கா மூடப்பட்டது.

பின்னர் சிங்கங்களை தேடும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டனர். பின்னர் கூண்டில் இருந்து தப்பிய சிறிது நேரத்திலேயே உயிரியல் பூங்காவுக்கு அருகே சுற்றிதிரிந்து கொண்டிருந்த சிங்கங்களை ஊழியர்கள் கண்டுபிடித்தனர்.
பின்னர் சிங்கங்களை பாதுகாப்பாக கூண்டுக்கு கொண்டு சென்றனர். கூண்டில் இருந்து சிங்கங்கள் தப்பித்தது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என உயிரியல் பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.