சென்னை வெள்ள நிவாரணம் - ரேஷன் கார்டு இல்லை - 5.5 லட்ச விண்ணப்பம்.? அரசின் எடுத்த முக்கிய முடிவு..!!
தமிழகத்தில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் கடும் மழை மற்றும் வெள்ள பாதிப்பினால் நிவாரண தொகை வழங்கும் பணிகள் கடந்த 17-ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகின்றது.
சென்னை வெள்ள பாதிப்பு
இருவாரங்களுக்கு முன்பு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இரண்டு நாட்கள் இடைவிடாது பெய்த கனமழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புகள் ஏற்பட்டது.
இந்த பாதிப்புகளை சந்தித்துள்ள மக்களுக்கு தமிழக அரசு சார்பில் நிவாரணமாக 6000 ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது. ரேஷன் அட்டை உள்ளவர்களுக்கு 6000 ரூபாய் வழங்கப்படும் நிலையில், ரேஷன் அட்டை இல்லாதவர்களும் நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்தது.
அரசின் அதிரடி முடிவு..!
ரேஷன் கார்டு இல்லாத 5.5 லட்ச பேர் இந்த 4 மாவட்டங்களில் இது வரை நிவாரண நிதிக்காக விண்ணப்பித்துள்ளதாக தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. அறிவிப்பின் படி, சென்னையில் மட்டும் 4.90 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். காஞ்சிபுரத்தில் 29 ஆயிரம் பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 22 ஆயிரம் பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 14 ஆயிரம் பேரும் என மொத்தமாக இது வரை 5.5 லட்சம் பேரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
இவர்களுக்கு நிவாரணங்கள் வழங்குவதா.? என்ற ஆலோசனையில் தற்போது தமிழக அரசு இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.