அமெரிக்காவில் வங்கிக்குள் புகுந்து கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர் - 5 பேர் பலி
அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் உள்ள அமெரிக்கா வங்கிக்குள் புகுந்து மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர்.
வங்கியில் துப்பாக்கிச் சூடு
பலிலுாயிஸ்வில்லி நகரின் கிழக்கு முதன்மை சாலையில் ஓல்டு நேஷனல் வங்கி கிளை ஒன்று செயல்பட்டு வருகிறது.
நேற்று இந்த வங்கிக்குள் புகுந்த மர்ம நபர் திடீரென துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டார்.இதனால் அங்கிருந்த பலர் காயம் அடைந்தனர்.

மேலும் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் 6 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
துப்பாக்கி சூடு நடத்திய நபரும் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில் தொடர்ந்து நடைபெற்று வரும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.