கார் லாரி மீது மோதி பயங்கர விபத்து - 5 இஸ்ரோ ஊழியர்கள் பலி - அதிர்ச்சி சம்பவம்
கேரளாவின் ஆலப்புழா தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த கார் விபத்தில் 5 இஸ்ரோ ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
5 இஸ்ரோ ஊழியர்கள் பலி
கேரளாவின் ஆலப்புழா தேசிய நெடுஞ்சாலையில், காக்காஜோம் மேம்பாலம் அருகே கார் லாரி மீது மோதியது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
பலியானவர்கள் ஷிஜின் தாஸ் (24), மனு (24), பிரசாத் (25), அமல் (28) மற்றும் சுமோத் என அடையாளம் காணப்பட்டனர்.
இவர்கள் 5 பேரும் இஸ்ரோ கேன்டீனில் தற்செயல் பணியாளர்கள் வேலைப் பார்த்து வந்துள்ளனர். இவர்கள் திருமணத்திற்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், லாரி டிரைவர் மற்றும் கிளீனரை கைது செய்தனர்.
