சுற்றுலா விமானம் விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலி - பிரான்ஸில் சோகம்

Plane Crash
By Petchi Avudaiappan May 21, 2022 10:52 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

பிரான்ஸில் சுற்றுலா விமானம் விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பிரான்ஸ் நாட்டில் தென்கிழக்கு பகுதியிலுள்ள கிரெனோபில் அருகே உள்ள வெர்சௌட் விமானநிலையத்தில் இருந்து நேற்று பிற்பகலில் சுற்றுலா விமானம் ஒன்று 5 பேருடன் புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. 

இதனிடையே விபத்தை நேரில் பார்த்தவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்த நிலையில்.சம்பவ இடத்திற்கு வந்த சுமார் 60 தீயணைப்பு வீரர்கள் விரைவாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது விமானத்தின் எரிந்த நிலையில் இருந்த இடிபாடுகளுக்குள் நான்கு பெரியவர்கள் மற்றும் ஒரு குழந்தையின் உடல்களை மீட்டனர்.

இதன்மூலம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 5 பேர் உயிரிழந்ததாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.