கனடாவில் சாலை விபத்தில் 5 இந்திய மாணவர்கள் உயிரிழப்பு

accident ontarioaccident indiansdiedincanada jaishankartweet
By Swetha Subash Mar 14, 2022 06:38 AM GMT
Report

கனடாவில் சாலை விபத்தில் இந்திய மாணவர்கள் 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவில் ஒண்டரியோ மாகாணத்தின் நெடுஞ்சாலையில் நிகழ்ந்த வாகன விபத்தில் இந்தியாவை சேர்ந்த 5 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக கனடாவின் செய்தி நிறுவனமான CP24 தெரிவித்துள்ளது.

டொரொண்டொவில் பயணிகளை எற்றிக்கொண்டு சென்ற வேன் மீது எதிரே வந்த பலத்த வாகனம் மோதியதால் எற்பட்ட விபத்தில் இந்தியாவை சேர்ந்த 5 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கனடாவில் சாலை விபத்தில் 5 இந்திய மாணவர்கள் உயிரிழப்பு | 5 Indian Students Died In Ontario Of Canada

விபத்துக்குள்ளான 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மேலும் 2 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் உயிரிழந்த மாணவர்கள் ஹர்பிரீத் சிங், ஜஸ்பிந்தர் சிங், கரன்பால் சிங், மோஹித் சௌஹான் மற்றும் பவன் குமார் என அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் தனது இரங்கல் செய்தியை பகிர்ந்துள்ள வெளியுறவு துறை அமைச்சர் ஜெய் ஷங்கர்,

“கனடாவில் 5 இந்திய மாணவர்கள் உயிரிழந்ததற்கு எனது ஆழ்ந்த இரங்கல். அவர்களின் குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்.

காயமடைந்தவர்கள் குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள்.” என பதிவிட்டுள்ளார்.