தோனி உள்ளிட்ட 5 இந்திய வீரர்களுக்கு ஆயுள் உறுப்பினர் கெளரவம் - யாருக்கெல்லாம் தெரியுமா?
19 வீரர், வீராங்கனைகளுக்கு ஆயுள் உறுப்பினர் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.
ஆயுள் உறுப்பினர்
Marylebone Cricket Club (MCC) 1787 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு கிரிக்கெட் கிளப் ஆகும். லண்டன், சர்வதேச கிரிக்கெட் போட்டி விதிமுறைகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் மேரிலிபோன் கிரிக்கெட் கிளப் (எம்.சி.சி.) லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் செயல்பட்டு வருகிறது.
பழம் பெருமை வாய்ந்த இந்த கிளப் புதிதாக 19 வீரர், வீராங்கனைகளுக்கு ஆயுள் உறுப்பினர் கவுரவம் வழங்கி இருக்கிறது.
5 இந்திய வீரர்கள்
இதில் இந்திய முன்னாள் கேப்டன் டோனி, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, இந்திய பெண்கள் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ், முன்னாள் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி ஆகியோரும் அடங்குவார்கள்.
தோனி தலைமையில், இந்தியா 2007 ஐசிசி டி20 உலகக்கோப்பை, 2011 கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் 2013 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. 2007ம் ஆண்டு உலகக் கோப்பையில் யுவராஜ் சிங் 6 பந்துகளுக்கு 6 சிக்ஸர் அடித்து அசத்தினார்.
? MCC awards Honorary Life Membership of the Club to some of the world’s finest cricketers.
— Marylebone Cricket Club (@MCCOfficial) April 5, 2023
We can now reveal the names of the latest men and women to have been bestowed with this privilege ⤵️#CricketTwitter
சுரேஷ் ரெய்னா தற்காலிக கேப்டனாகவும் இந்திய அணியை வழிநடத்தியிருக்கிறார். மிதாலி ராஜ்
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை வழிநடத்தியவர். அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த ஒரே வீராங்கனை. ஜூலன் கோஸ்வாமி 2007இல் ஐசிசி சிறந்த வீராங்கனை விருதை வென்றவர்.