என்கிட்ட சில்லறை இல்லை யூரோதான் இருக்கு : வெளிநாட்டு Coin-ஐ கொடுத்த ஆட்டோ ஓட்டுநர்
ஐந்து ரூபாய் சில்லறைக்கு பதிலாக ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பெண்ணுக்கு ஒரு யூரோ காயினை கொடுத்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
புதிய ரூபாய்
தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் என்னதான் நவீன முறையில் பணம் செலுத்தும் முறை வந்தாலும் , இப்போதும் நாம் ஆட்டோக்களில் பயணிக்கும் போது சில்லறை பிரச்சினை பயணிகளுக்கும் ஓட்டுநர்களுக்கும் வருவதுண்டு இந்த நிலையில் அனுஷ்கா என்ற பெண், ஆட்டோவில் பயணித்த கட்டணம் செலுத்திய பிறகு, சில்லறைக்கு பதிலாக வெளிநாட்டு காசை அவருக்கு கொடுத்திருக்கிறார்.

வைரலாகும் புகைப்படம்
அந்த ஆட்டோ ஓட்டுநர். 5 ரூபாய் சில்லறை இல்லாததால் ஒரு யூரோ காயினை அவர் வழங்கியுள்ளார். இதனை தன் ட்விட்டர் பக்கத்தில் அந்த பெண் பகிர்ந்திருந்தார்.
I got a euro instead of a five rupee coin as change from the rickshaw wale uncle???????? pic.twitter.com/8VD4QwNy6E
— Anushka (@awolaxolotl) February 16, 2023
ஒரு யூரோவின் இந்திய மதிப்பு 88 ரூபாய். ஐந்து ரூபாய் சில்லறை வாங்கும் இடத்தில் அவருக்கு 83 ரூபாய் அதிகமாக கிடைத்துள்ளது.
தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது