தொடர்ந்து 5 மணி நேரம் இடைவிடாமல் இரட்டை சிலம்பம் சுற்றி 4 வயது சிறுவன் உலக சாதனை - குவியும் பாராட்டு

Continuing 5 hours Around the double mold 4 year old boy world record
By Nandhini Feb 04, 2022 05:38 AM GMT
Report

தொடர்ந்து 5 மணி நேரம் இடைவிடாமல் இரட்டை சிலம்பம் சுற்றி 4 வயது சிறுவன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். 

கோவை சின்னவேடம்பட்டி பகுதியை சேர்ந்த, நவீன்குமார். இவருடைய மனைவி வித்யாஸ்ரீ.  இவர்களது 4 வயது மகன் விதுன். இவர் தனியார் பள்ளியில் எல்கேஜி பயின்று வருகிறார்.

கடந்த 4 மாதங்களாக அப்பகுதியில் உள்ள சிலம்பம் பயிற்சியாளர் பிரகாஷ் நடத்தி வரும் முல்லை தற்காப்பு மற்றும் விளையாட்டு கலை பயிற்சி மையத்தில் சிலம்பகலையை பயின்று வருகிறார் விதுன். 

இந்நிலையில், தமிழ்நாடு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனப் பணியிடங்களில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீத இட ஒதுக்கீட்டில் சிலம்பம் விளையாட்டைச் சேர்த்து தமிழக முதலமைச்சர் அரசாணை வெளியிட்டுள்ளார்.

இதற்கு நன்றி சொல்லும் விதமாக சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள மைதானத்தில் அலங்கார இரட்டை சிலம்பத்தை இரண்டு கைகளிலும் சுமார் 5 மணி நேரம் இடைவெளி இல்லாமல் சிறுவன் விதுன் தொடர்ந்து சுற்றி சாதனை படைத்துள்ளார்.

இவரது இந்த சாதனை நோபள் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. உலக சாதனை படைத்த விதுனுக்கு பலர் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.