ரெய்டுக்கு சென்ற இடத்தில் சிக்கிய வியாபாரியின் பாலியல் வீடியோக்கள் - அதிர்ச்சியடைந்த போலீசார்
சென்னையில் ஐந்து சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் மளிகைக்கடை வியாபாரி சிக்கியுள்ள நிலையில் அவர் சிக்கிய பின்னணி போலீசாருக்கே அதிர்ச்சிகரமாக அமைந்துள்ளது.
சென்னை டி.பி.சத்திரத்தில் மளிகைக்கடை நடத்தி வந்தவர் பெருமாள் என்பவரின் கடையில் குட்கா விற்கப்படுவதாக டி.பி.சத்திரம் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் டி.பி.சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையிலான குழு கடையைச் சோதனை செய்தனர்.
அப்போது 30 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்ததோடு பெருமாளைக் கைதுசெய்தனர். இதுதொடர்பாக நடந்த விசாரணையில் பெருமாள் குட்கா சப்ளை செய்தவர்களை காட்டிக் கொடுக்காமல் தப்பிக்க நினைத்துள்ளார்.
இதனால் அவரது செல்போனை வாங்கி ஆய்வு செய்தால் நிச்சயம் குற்றவாளிகள் கிடைப்பார்கள் என இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி நினைத்துள்ளார். ஆனால் பெருமாள் கொடுக்க மறுத்து அடம்பிடிக்க அவரிடம் இருந்து செல்போன் பறிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.
அதில் கேலரி பகுதிக்கு சென்று குட்கா தொடர்பான தகவல்களை வைத்திருக்கிறாரா? என்று பார்த்துள்ளார். அங்கு பெருமாளின் செல்போனில் ஆபாச படங்கள் பதிவு செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து இதுபற்றி உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தகவல் தெரிவித்தார். கீழ்ப்பாக்கம் போலீஸ் துணை கமிஷனர் கார்த்தி கேயன், உதவி கமிஷனர் ரமேஷ் தலைமையில் போலீஸ் படையினர் நேற்று பெருமாளின் செல்போனை தீவிரமாக ஆய்வு செய்தனர்.
சுமார் 50க்கும் மேற்பட்ட ஆபாச படங்களிலும் பெருமாள் தான் இருந்துள்ளார். அவர் தனது இரு கள்ளக்காதலி மற்றும் அவரது மகள்களுடனான பாலியல் அத்துமீறல்களை வீடியோவாக பதிவு செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அக்கா - தங்கையான அந்த கள்ளக்காதலிகள் தாங்கள் பெருமாளை ஏமாற்றி மளிகைப் பொருட்கள், பணம் பெற்றதோடு, வறுமையை காரணம் காட்டி தங்களது இரு மகள்களையும் அவரின் இச்சைக்கு பலி கொடுத்துள்ளனர்.
இதைத்தவிர இவர்களது பக்கத்து வீடுகளில் உள்ள 3 சிறுமிகளிடமும் பெருமாள் தனது கைவரிசையைக் காட்டியுள்ளார். குட்கா வேட்டைக்கு போன இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி சந்தேகத்தின் பேரில் பெருமாளின் செல்போனை ஆய்வு செய்ததால் தான் இந்த பாலியல் வன்கொடுமைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
இதைத் தொடர்ந்து பெருமாளை கைது செய்த போலீசார், அவரது பாலியல் குற்றங்களுக்கு உடந்தையாக இருந்த கள்ளக்காதலிகள் லலிதா-சுந்தரியையும் கைது செய்தனர்.
இவர்கள் மீது போக்சோ சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவம் சென்னை மட்டுமல்லாது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.