நியூசிலாந்தை திணறடிக்க காத்திருக்கும் ஐந்து இந்திய வீரர்கள்..!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணிக்கு 5 இந்திய அணி வீரர்கள் சவாலாக இருப்பார்கள் என்று கருதப்படுகிறது.
இங்கிலாந்தில் சவுத்தாம்ப்டன் நகரில் வரும் ஜூன் 18-ஆம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி நடைபெற உள்ளது. இதில் மோதும் இந்தியா நியூசிலாந்து அணிகளின் 15 பேர் கொண்ட வீரர்களின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
இரு அணி வீரர்களும் கோப்பையை வெல்ல தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்ட நிலையில் 5 இந்திய வீரர்கள் நியூஸ் அணிக்கு கடும் சவாலை ஏற்படுத்துவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.
கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், இசாந்த் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகிய 5 வீரர்கள் பேட்டிங் பவுலிங் மற்றும் ஃபீல்டிங் ஆகியவற்றில்
நியூசிலாந்து அணிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்துவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.