திடீர் வெள்ளத்தில் சிக்கிய குடும்பம்..5 பேர் உயிரிழப்பு - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!
நீர்வீழ்ச்சியில் மூழ்கி 5 பேர் உயிரிழந்தது அதிர்ச்சி அள்ளித்துள்ளது.
சிக்கிய குடும்பம்
மகாராஷ்டிரா மாநிலம், புனே லோனாவாலா பகுதியில் உள்ள புஷி அணை நீர்வீழ்ச்சிக்கு ஒரு குடும்பத்தினர் சுற்றுலா வந்துள்ளனர். அவர்களில் ஒரு பெண்ணும், 4 குழந்தைகளும் ஆர்வமாக நீர்வீழ்ச்சியின் மிக அருகில் சென்று விளையாடி கொண்டிருந்தனர்.
அப்போது தண்ணீர் அதிகமாக சென்று கொண்டிருந்ததால், அவர்கள் அச்சமடைந்து தங்களை காப்பாற்றுமாறு கூச்சலிட்டனர். அடுத்த சில நிமிடங்களில் அவர்கள் அனைவரும் வெள்ளத்தில் அடுத்துச் செல்லப்பட்டனர். இந்த தகவலறிந்து வந்த போலீஸார் மற்றும் மீட்புக் குழுவினர் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அதிர்ச்சி வீடியோ
போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் அவர்களை காப்பாற்ற இயலவில்லை. தற்போது ஒரு பெண் மற்றும் இரு குழந்தைகளின் சடலங்களை மீட்கப்பட்டுள்ளன. மேலும் இருவரை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர்.
சடலமாக மீட்கப்பட்டவர்கள் ஷாஹிஸ்தா அன்சாரி (36), அமிமா அன்சாரி (13), உமேரா அன்சாரி (8) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மற்ற இருவரான அட்னான் அன்சாரி (4), மரிய சையத் (9) ஆகிய இருவரையும் தேடிவருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பான அதிர்ச்சி வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Five people from family were swept away while playing in the waterfall behind Bhushi Dam in Lonavala near Pune. The incident took place in the sunday afternoon and the drowned people are being searched for in the water of the dam through various teams. pic.twitter.com/AZUEiRhciK
— News Bulletin (@newsbulletin05) July 1, 2024