தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

Tamil nadu TN Weather Weather
By Jiyath Jul 17, 2024 07:03 AM GMT
Report

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

கனமழை 

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் "மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடியலேசானது முதல் மிதமான மழைபெய்யக்கூடும்.

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்! | 5 Districts To Receive Heavy Rain In Tamilnadu

மேலும் வலுவான தரைக்காற்று 30 முதல் 40 கிமீவேகத்தில் வீசக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

தொடர்ந்து, நாளை (ஜூலை 18) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழைபெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகரை பொருத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

எச்சரிக்கை 

நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு கடலோரப் பகுதிகள், மத்திய கிழக்கு வங்கக்கடல்,

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்! | 5 Districts To Receive Heavy Rain In Tamilnadu

தெற்கு, மத்திய வங்கக்கடல், வடக்கு அந்தமான், ஆந்திர கடலோர பகுதிகள், மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல்,கர்நாடக கடலோர பகுதிகள், கேரள கடலோர பகுதிகள் மற்றும் லட்சதீவு பகுதிகளில் இன்றும் நாளையும் அதிகபட்சமாக மணிக்கு 55 முதல் 65 கிமீவேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென எச்சரிக்கப்பட்டுள்ளது.