இந்த 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை இருக்கு - வானிலை மையம் தகவல்
heavyrain
chennairain
5 distric
By Irumporai
சென்னை அருகே இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்க இருக்கிறது. இதனால் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது..
இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக சென்னை அருகே கரையை கடக்க இருக்கும் நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.