உடல் எடையை குறைக்க உதவும் 5 உணவுகள்
உடல் பருமன் என்பது உடலில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதால் ஏற்படக்கூடிய ஒன்றாகும். மேலும், ஒரு மனிதருக்கு உடலில் ஏற்படக்கூடிய பாதி பிரச்சனைகள் அவர்களுடைய உடல் பருமனால் வரக்கூடியதே ஆகும். ஆக, எதிர்காலங்களில் உடலில் பல பிரச்சனைகள் வராமல் தடுக்க வேண்டும் என்றால் நம் உடல் எடையை சரியாக பராமரிக்க வேண்டும்.
அப்படியாக இந்த உடல் பருமன் கொண்டிருப்பவர்கள் தினமும் நடைப்பயிற்சி, யோகா, உணவில் கட்டுப்பாடுகள் கொண்டுவர நிச்சயம் அவர்களுக்கு ஒரு நல்ல மாற்றம் கிடைக்கும். அந்த வகையில் உடல் எடையை மிக எளிதாக குறைக்க உதவும் ஏழு விலை குறைந்த உணவுகள் பற்றி பார்ப்போம்.
1. ஓட்ஸ்:
ஓட்ஸில், ஃபைபர் சத்துகள் அதிகம் இருக்கிறது. இதில் இருக்கும் Beta Glucan, நம்ம ரத்த அளவை குறைத்து நமக்கு நீண்ட நேரம் பசி ஏற்படாமல் வைத்துக் கொள்கிறது.
2. முட்டை:
முட்டை நம் உடலில் மெட்டபாலிசத்தை அதிகப்படுத்துவதோடு நீண்ட நேரம் பசி ஏற்படாமலும் நம்மை வைத்துக் கொள்கிறது.
3.பருப்பு வகைகள்:
பருப்பு வகைகளில் நம் உடலுக்கு தேவையான எல்லா புரதங்களும் இருப்பதாக மருத்துவர்கள் சொல்கின்றனர். அதை போல் எல்லோரும் வாங்குவதற்கு எளிய உணவு வகையும் கூட. இதை சாப்பிட்டு வரும் பொழுது உடல் எடை சீராக இருக்கும்.

4. வாழைப்பழம்:
வாழைப்பழத்தில் ஃபைபர், பொட்டாசியம் இருப்பதோடு மிக எளிதில் செரிமானம் செய்யக்கூடிய சத்துக்கள் உள்ளன. மேலும் இவை நமக்கு நீண்ட நேரம் பசி ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.
5. காய்கறிகள்:
உடல் எடையை குறைப்பதற்கு நீங்கள் கீரை வகைகளை எடுத்துக் கொள்ளலாம். அதில் இருக்கக்கூடிய நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் நீண்ட நேரம் நமக்கு பசி ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது.
பின் குறிப்பு:
எல்லோருக்கும் எல்லா உணவுகளும் ஒத்துக்கொள்வது இல்லை. அவர்கள் கட்டாயம் எந்த ஒரு விஷயத்தை பின்பற்ற வேண்டும் என்றாலும் அதற்கு முன் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.