இலங்கையிலிருந்து அகதிகளாக தமிழகம் வந்த 5 ஈழத்தமிழர்கள்
இலங்கையில் இருந்து அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்த 5 ஈழத்தமிழர்கள்.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.
தனுஷ்கோடி வந்த ஈழத்தமிழர்கள்
பலர் தங்களது வயிற்று பசியை போக்க கூட இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கையில், இருந்து தமிழகத்தை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர்.
ஏற்கனவே 100- க்கும் மேற்பட்டோர் தமிழகத்திற்கு வருகை புரிந்துள்ள நிலையில், அவர்கள் சிறப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், தற்போது மேலும் 5 பேர் தமிழக வருகை புரிந்துள்ளனர். 3 குழந்தைகள் உட்பட 5 பேர் அகதிகளாக தனுஷ்கோடி அருகே ஐந்தாம் தீடையில் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களை மீட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.